Providing IT Services for political parties
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் டி. டி. வி. தினகரனால் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு அரசியல் அமைப்பாகும்.[2] நவம்பர் 23, 2017 ஆம் ஆண்டு ஆா். கே. நகா் சட்டமன்ற உறுப்பினா் தினகரனிடம் இருந்து அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலைச் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் பறித்துக்கொண்டது.[3] இதனால் கட்சி மற்றும் சின்னம் இல்லாமல் ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டார்.
மதுரை, மேலூரில் நடைபெற்றப் பொதுக் கூட்டத்தில் தனது புதிய அமைப்பின் பெயா் மற்றும் அமைப்பின் கொடியை மார்ச்சு 15, 2018 அன்று அறிவித்தார். அந்தக் கூட்டத்தில் தன் அமைப்பின் பெயர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்று அறிவித்தார்.[4]
கறுப்பு, வெள்ளை, சிவப்பு நிற கொடியில் ஜெயலலிதாவின் படம் இடம் பெற்றுள்ளது. இரட்டை இலையையும், அதிமுகவையும் மீட்கும் வரை இந்த பெயரில் செயல்படுவோம் என்று தினகரன் தெரிவித்தார்.
2019 பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் போது உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, தேர்தல் ஆணையம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பரிசுப்பெட்டி சின்னத்தைப் பொதுச்சின்னமாக வழங்கியது. இந்தக் கட்சியானது தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாததால் இந்த அணிக்குப் பொதுவான சின்னம் வழங்கியபோதும், அவர்கள் சுயேச்சைகளாகவே கருதப்படுவர் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்தது.[5]